» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மீன் வரத்து குறைவு: வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள்!
புதன் 11, பிப்ரவரி 2026 11:06:23 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து கடுமையாகக் குறைந்துள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மொத்தம் 272 விசைப்படகுகள் சுழற்சி முறையில் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. வழக்கமாக அதிகாலை 5 மணிக்குக் கடலுக்குச் செல்லும் மீனவர்கள், இரவு 11 மணியளவில் கரை திரும்புவார்கள். இதன் மூலம் நாளொன்றுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் வரை மீன் ஏலம் நடைபெறும். கேரளாவிலிருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து மீன்களை வாங்கிச் செல்வார்கள்.
இத்தொழிலை நம்பி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் சுமார் 5,000 தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது கடலில் மீன்கள் வரத்து போதிய அளவில் இல்லாததால், மீனவர்கள் கடலுக்குச் செல்வது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக மீன் வரத்து மிகக் குறைவாக உள்ளதால், பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தற்போது தினமும் 30 முதல் 50 படகுகள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றன.
இது குறித்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறுகையில், "ஒரு விசைப்படகு கடலுக்குச் சென்று வரச் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. மீன் வரத்து குறைந்ததால் டீசல் மற்றும் மீனவர்களுக்கான ஊதியத்தைக் கூட ஈட்ட முடிவதில்லை. நாள்தோறும் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்கப் படகுகளைத் துறைமுகத்திலேயே நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, அரசு உடனடியாக மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

கல்லிடைக்குறிச்சி அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:39:59 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

