» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்: போலீசார் தீவிர விசாரணை
புதன் 11, மார்ச் 2026 8:27:39 AM (IST)
சாத்தான்குளம் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிவிட்டு, பெட்ரோலுக்கு பணம் தராமல் தப்பிய 3 மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்திலிருந்து நாசரேத் செல்லும் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு, நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்துள்ளனர். மதுபோதையில் இருந்த அவர்கள், தங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனர். அதற்கான பணத்தை ஊழியர் கேட்டபோது, பணத்தைத் தராமல் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கிருந்த பெட்ரோல் விநியோக இயந்திரத்தை ஓங்கி அடித்த அந்த மர்ம நபர்கள், "எங்களிடமே பணம் கேட்பாயா?" என ஊழியரை மிரட்டியுள்ளனர். இதைக் கண்டு மற்ற ஊழியர்கள் அங்கு திரண்டு வந்ததைக் கவனித்த அந்த மூவரும், உடனடியாக மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பெட்ரோல் பங்க்கிலிருந்து தப்பிய அந்த மர்ம நபர்கள், சற்றுத் தொலைவில் ஒரு வீட்டில் நடந்து கொண்டிருந்த இறுதிச் சடங்கு ஊர்வலத்திலும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த மூன்று பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால், பொதுமக்கள் கையில் சிக்காமல் அவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சாத்தான்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

துணை நடிகைக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:31 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)


தமிழன்Mar 11, 2026 - 09:57:04 AM | Posted IP 172.7*****