» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் த.வெ.க. நிர்வாகி மீது இளம்பெண் மீண்டும் புகார்!
வியாழன் 30, ஜூலை 2026 8:41:39 AM (IST)
த.வெ.க. நிர்வாகிகள் மீது ஏற்கனவே பாலியல் புகார் அளித்திருந்த இளம்பெண், தற்போது மற்றொரு த.வெ.க. நிர்வாகி மீது மிரட்டல் புகார் அளித்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த த.வெ.க.வைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், த.வெ.க. நிர்வாகிகள் 2 பேர் தன்னை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் பேரில் நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்த இளம்பெண் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புதிய புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: "த.வெ.க. நிர்வாகி ஒருவர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் கிராம மக்கள் சிலருக்கு நான் பணம் வாங்கிக் கொடுத்தேன். நான் உட்பட அனைவரும் வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டோம்.
ஆனால், அவர் தற்போது என்னிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்"எனத் தெரிவித்துள்ளார். இப்புகார் மனு குறித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)



BabuJul 31, 2026 - 11:26:28 AM | Posted IP 162.1*****