» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு!
வியாழன் 30, ஜூலை 2026 10:23:05 AM (IST)
கயத்தாறு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு வாலிபர்களைக் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான காவல்துறையினர், கயத்தாறு அருகிலுள்ள பணிக்கர்குளம் கிராமப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள இடிந்த சர்ச் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களைப் பிடித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பபாண்டி மகன் இசக்கிமுத்து (26), மற்றும் கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (28) என்பதும், அவர்கள் சட்டையின் பையில் விற்பனைக்காக வைத்து வைத்திருந்த 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட இசக்கிமுத்து மற்றும் முத்துக்காளை ஆகிய இருவரையும் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)



இவங்களாஊக்குJul 30, 2026 - 05:07:36 PM | Posted IP 172.7*****