» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திறந்தவெளியில் உள்ள மின் ஸ்விட்ச் பாக்ஸ்கள்: உடனடியாகச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

வியாழன் 30, ஜூலை 2026 5:46:09 PM (IST)



தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் திறந்த நிலையில் உள்ள மின் ஸ்விட்ச் பாக்ஸ்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு அன்னை வேளாங்கண்ணி நகர் குடியிருப்புப் பகுதியில், சாலையோரம் அமைந்துள்ள மின்கம்பத்தில் உள்ள ஸ்விட்ச் பாக்ஸ்கள் பாதுகாப்பற்ற முறையில் திறந்த நிலையில் ஆபத்தான முறையில் காணப்படுகின்றன. மின்கம்பத்தில் இரண்டு ஸ்விட்ச் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே கதவுகள் சேதமடைந்தோ அல்லது மூடப்படாமலோ திறந்த நிலையில் உள்ளன.

அதிகளவில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வாகனங்கள் கடந்து செல்லும் பகுதி என்பதால், எதிர்பாராத விதமாக அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, ஏதேனும் பெரிய விபத்து அல்லது பாதிப்புகள் ஏற்படும் முன், திறந்த நிலையில் இருக்கும் இந்த மின் ஸ்விட்ச் பாக்ஸ்களை உடனடியாக ஆய்வு செய்து, பாதுகாப்பான முறையில் சீரமைத்துத் தருமாறு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் மின்சாரவாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

அதுJul 30, 2026 - 06:28:15 PM | Posted IP 172.7*****

EB அரசு பணியாளர்களுக்கு மூளை இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory