» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி 1-ஆவது கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட ஆய்வு: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வெள்ளி 31, ஜூலை 2026 4:09:59 PM (IST)

தூத்துக்குடி 1-ஆவது கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட ஆய்வு நடைபெற்று வருவதாக மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டம் மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தைத் தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
வரவிருக்கும் மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மேலும் நகரில் உள்ள சிறிய மற்றும் பெரிய கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் முழுமையாகத் தூர்வாரப்பட உள்ளன.
பொதுமக்கள் குடிநீரை வீணாக்கக் கூடாது. குடிநீரைச் செடிகளுக்குப் பாய்ச்சுவதற்கும், கட்டிடப் பணிகளுக்கும் பயன்படுத்துவது தவறான செயலாகும். இதனை மீறுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
1-ஆவது கேட் பகுதியில் ரயில்வே பாலம் ஆய்வு:
கூட்டத்தில் திமுக உறுப்பினர் சுரேஷ்குமார் பேசுகையில், "தூத்துக்குடி நகரில் அடிக்கடி ரயில்வே கேட்டுகள் மூடப்படுவதால் பொதுமக்கள் பெரும் போக்குவரத்து நெரிசலிலும் சிரமத்திலும் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய மேயர், "பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், தூத்துக்குடி 1-ஆவது கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
தவெக உறுப்பினர் வெளிநடப்பு:
முன்னதாக, இக்கூட்டம் தொடங்கியபோது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் மந்திர மூர்த்தி, தனக்கு மன்றத்தில் உரிய இருக்கை ஒதுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து, மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பான தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)


