» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முத்துநகர் விரைவு ரயிலில் புகையிலைப் பொருட்கள் கடத்தல்: வாலிபர் கைது!
வெள்ளி 31, ஜூலை 2026 5:08:32 PM (IST)

சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சட்டவிரோதமாகப் போதை புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி இருப்புப்பாதை உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர், இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த முத்துநகர் விரைவு ரயிலில் விருதுநகர் - தூத்துக்குடி இடையே தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ரயிலின் பின் பகுதியில் உள்ள பொதுப் பெட்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த நபரின் நீல நிறத் தோள் பையைச் சோதனையிட்டனர். சோதனையில், பைக்குள் சட்டவிரோதமாகப் போதை புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 2.760 கி.கி போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்தவர் கோவில்பட்டி பசுவந்தனை பாரதி நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சண்முகராஜ் (31) என்பது தெரியவந்தது. உடனே அவரைப் பிடித்த காவல்துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுடன் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து ஒப்படைத்தனர். சோதனையின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். இச்சம்பவம் குறித்துச் சார்பு ஆய்வாளர் சண்முகானந்த் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)


