» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வ.உ.சி கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!

சனி 1, ஆகஸ்ட் 2026 12:45:12 PM (IST)

MayorDrugaware.jpg

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழச்சியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள வ.உ.சி கல்லூரியில் 'மை பாரத்' தூத்துக்குடி கிளையின் சார்பாக, போதைப் பொருளற்ற மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மேயர் ஜெகன் பெரியசாமி, போதைப்பழக்கத்திற்கு எதிராக மாணவ-மாணவியருடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் வ.உ.சி கல்லூரியின் பொறுப்பு முதல்வர் வள்ளியம்மாள், சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம், மை பாரத் மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஞானசந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆரோக்கிய செல்வ சுந்தரி, கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

கோமாளிAug 1, 2026 - 02:31:13 PM | Posted IP 172.7*****

அப்போ திராவிட குடும்பங்கள் சாராய ஆலைகளில் இருந்து டாஸ்மாக்கில வரும் சத்துப் பானமா விற்கிறாங்க??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory