» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசியல் நாகரிகமின்றி அவதூறு பரப்புவதா? - அமைச்சர் நிர்மல் குமாருக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
சனி 1, ஆகஸ்ட் 2026 5:10:36 PM (IST)
அமைச்சர் நிர்மல் குமார் அரசியல் நாகரிகமின்றி அவதூறு பரப்புவதாக திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நிர்மல் குமார் அரசியல் நாகரிகமின்றி முன்னாள் முதலமைச்சர் கலைஞர், பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் என் மீது அவதூறு பரப்பிப் பேசியுள்ளதாகத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மழை வெள்ளக் காலங்களில் தூத்துக்குடியில் யாருமே களத்திற்கு வரவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் உண்மையைப் மறைத்துப் பேசியுள்ளார். வெள்ளப் பாதிப்பின் போது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் என்ற முறையில் தூத்துக்குடியின் அனைத்து வீதிகளுக்கும் நேரடியாகச் சென்று சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டோம்.
அன்றைய துணை முதல்வர் மற்றும் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து உடனடி தீர்வை ஏற்படுத்தினர். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்காமல் புறமுதுகு காட்டி ஓடியவர்கள், தூத்துக்குடி நிவாரணப் பணிகளைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
தூத்துக்குடியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் திமுகவினர் வசூல் செய்வதாக நிர்மல் குமார் பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். திமுகவினர் அப்படி யாரிடமும் நிதி வசூலிக்கவில்லை. வசூல் செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டை நிர்மல் குமாரால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபிக்கத் தவறினால் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதிகாரமும் பேச வாயும் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அகம்பாவத்தைத் தூக்கி எறிய வேண்டும். பல கட்சிகளுக்குத் தாவிய பச்சோந்தி நிர்மல் குமார், இனியாவது கண்ணியத்துடன் பேசப் பழக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)



Antony Paul Raj PAug 1, 2026 - 05:29:36 PM | Posted IP 172.7*****