» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறு செய்தி : நடவடிக்கை எடுக்க உத்தரவு!
புதன் 3, ஏப்ரல் 2024 5:05:21 PM (IST)
மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறு செய்தி வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வேடசந்தூரைச் சேர்ந்த மரியசெல்வி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தனது உறவினரான பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, "ஒருவரைப் பற்றி செய்தி வெளியிடும் முன் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், செய்தி வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.