» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 2 பேர் பலி..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
வியாழன் 5, டிசம்பர் 2024 4:40:12 PM (IST)
பல்லாவரம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

பின்னர், இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "22 பேருக்கு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிநீரில் பாதிப்பா என்ற சந்தேகம் உள்ளது. எதனால் பாதிப்பு என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். குடிநீர் மாதிரியை ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான பாதிப்புதான் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருவர் இறந்ததற்கான காரணம் பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவரும். அதோடு குடிநீர் மாதிரியும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள், அமைச்சர்கள் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பகுதியில் மாநகராட்சி மூலம் வாகனங்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொதுவாகவே எந்த விஷயத்தை எடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை கூறி வருகிறார். இதையே வாடிக்கையாகவும் கொண்டுள்ளார்.” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)

காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 8:09:20 AM (IST)

மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ம் தேதி கமல்ஹாசன் பதவி ஏற்பு!
சனி 12, ஜூலை 2025 5:16:32 PM (IST)

குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் பேட்டி
சனி 12, ஜூலை 2025 4:41:25 PM (IST)

பள்ளி வகுப்பறைகளில் மாற்றம்: இனி கடைசி பெஞ்ச் கிடையாது.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
சனி 12, ஜூலை 2025 3:47:08 PM (IST)

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது : அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
சனி 12, ஜூலை 2025 1:05:17 PM (IST)
