» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; 4 பேர் கைது: இளம்பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:36:21 AM (IST)

நாகர்கோவில், சுங்கான்கடையில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் சைமன்நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக நேசமணி நகர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். பின்னர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், ஒரு முதியவரும் இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் மடக்கி பிடித்து நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண்ணுடன் இருந்தவர் நெல்லை மாவட்டம் தனக்கன்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் (61) என்பதும், புரோக்கராக செயல்பட்டவர் மேலராமன்புதூரை சேர்ந்த பேபி (59) என்பதும் தெரிய வந்தது.

மேலும் விபசாரத்திற்காக வீட்டை வாடகைக்கு எடுத்து பேபி தொழில் நடத்தியது அம்பலமானது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பேபி, கிருஷ்ணனை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

இதேபோல சுங்கான்கடை அருகே உள்ள ஒரு பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக இரணியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆட்டோவில் பார்வதிபுரம் அருகே உள்ள கணியாங்குளம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார் (33) மற்றும் கீழ பெருவிளை பகுதியை சேர்ந்த கவிதா ஆகியோர் வெளிமாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணை அழைத்து வந்துள்ளனர்.

அவர்கள் 3 பேரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சதீஷ்குமாரும், கவிதாவும் புரோக்கர்களாக செயல்பட்டு வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமார் மற்றும் கவிதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணை மீட்டு அருகே உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory