» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு: 11 ஆயிரம் தி.மு.க.வினர் மீது வழக்கு

செவ்வாய் 11, மார்ச் 2025 11:25:13 AM (IST)

தமிழகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் தொடர்பாக திமுகவினர் 11ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் பேசும்போது தி.மு.க. எம்.பி.க்கள் நாகரீகம் இல்லாதவர்கள் போல நடந்து கொள்வதாக கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நேற்று மாலையில் தர்மேந்திர பிரதானின் உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 125 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பங்கேற்று தர்மேந்திர பிரதானின் உருவப் பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் 32 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சென்னையில் மட்டும் 25 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களிலும் தி.மு.க.வி னர் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளன


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory