» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)
திருச்செந்தூா் அருகே இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே தளவாய்புரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மனைவி தமிழ்ச்செல்வி என்ற சுதா (25). திருச்செந்தூா் அருகே காந்திபுரத்தைச் சோ்ந்த நயினாா் மகன் கன்னிமுத்து (40) என்பவா், 2011ஆம் ஆண்டு தளவாய்புரத்திலுள்ள முத்தாரம்மன் கோயில் கொடை விழாவுக்கு பந்தல் அமைக்க வந்தாா். அப்போது, அவருக்கும் தமிழ்ச்செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம்.
இதுதொடா்பாக இரு குடும்பங்களிடையே பிரச்னை ஏற்பட்டதால், கன்னிமுத்துவிடம் பேசுவதை தமிழ்ச்செல்வி நிறுத்திவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த கன்னிமுத்து, 2014ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த தமிழ்ச்செல்வியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளாா். புகாரின்பேரில், திருச்செந்தூா் போலீசார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை நீதிபதி பீரித்தா விசாரித்து, கன்னிமுத்துவுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சேவியா் ஞானபிரகாசம் ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தர்பூசணி பழம் குறித்த மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:47:42 PM (IST)

ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக ரு.150 கோடி வீட்டை முடக்குவதா? பிரபு கைவிரிப்பு
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:41:03 PM (IST)

தெரு நாய்களை கட்டுப்படுத்த ரூ.20 கோடி மதிப்பில் திட்டம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
வியாழன் 3, ஏப்ரல் 2025 4:25:09 PM (IST)

மத்திய அரசுக்கு எதிராக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குகிறது: நயினார் நாகேந்திரன்
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:49:04 PM (IST)

வக்பு சட்ட மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் - முதல்வர் ஸ்டாலின்
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:40:37 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)
