» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சப்-இன்ஸ்பெக்டரை உல்லாசத்திற்கு அழைத்த நர்ஸ் உள்பட 3 பேர் கைது: இளம்பெண் மீட்பு!

சனி 5, ஏப்ரல் 2025 8:35:18 AM (IST)

நாகர்கோவிலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை உல்லாசத்திற்கு அழைத்த நர்ஸ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இளம்பெண் மீட்கப்பட்டார்.

நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக லட்சுமணன் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கோர்ட்டு ரோட்டில் சீருடை அணியாமல் மப்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்களும், ஒரு வாலிபரும் சப்-இன்ஸ்பெக்டரிடம் சென்று பேசினார்கள்.

அப்போது அவர்கள் "தங்களிடம் இளம்பெண் ஒருவர் இருப்பதாகவும் அவருடன் உல்லாசமாக இருப்பதற்கு ரூ.1,500 தர வேண்டும்" என்றும் கூறி அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு அறையில் இளம்பெண் ஒருவர் இருந்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் இதுபற்றி வடசோி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

இதனிடையே வந்திருந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் என தெரிந்ததும், 2 பெண்களும், வாலிபரும் தப்பி ஓட முயன்றனர். அதற்குள் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பெண்கள் மற்றும் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இதற்கிடையே அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு வடசேரி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த 21 வயது இளம்பெண் என்பதும், அவரிடம் பணத்தாசை காட்டி 2 பெண்களும், அந்த வாலிபரும் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. பின்னர் இளம்பெண்ணை நாகர்கோவில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த ராமச்சந்திரன் (27), அவரது மனைவி அனு என்ற ராகவி (25) மற்றும் நாகர்கோவில் ஓட்டுபுறத் தெருவை சேர்ந்த சந்திரா என்ற விஜயகுமாரி (56) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகுமாரி தான் புரோக்கராக செயல்பட்டதும், அனு நர்சாக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory