» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கில் 9பேருக்கு ஆயுள் தண்டனை

சனி 5, ஏப்ரல் 2025 4:40:15 PM (IST)

தூத்துக்குடியில் 24 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

தூத்துக்குடி அருகே உள்ள மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் உப்பள தொழிலாளி இவரை கடந்த 17.9.1999 அன்று வழக்கு விசாரணை ஒன்றிற்காக தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு அப்போது உதவி ஆய்வாளராக இருந்த ராமகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்துள்ளனர். இதில் கடந்த 18.9.1999 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் வைத்து வின்சென்ட் மர்மமான முறையில் இறந்தார். 

இதைத்தொடர்ந்து வின்சென்ட் மனைவி கிருஷ்ணம்மாள் என்பவர் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் தனது கணவரை அடித்து கொலை செய்து விட்டதாக புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடைபெற்று இந்த லாக்கப் மரணம் தொடர்பாக காவலர்கள் சோமசுந்தரம், ஜெயசேகரன், ஜோசப் ராஜ், பிச்சையா, செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது 

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்தது வழக்கை விசாரணை செய்த நீதிபதி தாண்டவன் இந்த வழக்கில் தொடர்புடைய 11வது குற்றவாளியான தற்போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக உள்ள ராமகிருஷ்ணன் மற்றும் 1வது நபர் தற்போது நில அபகரிப்பு பிரிவில் ஆய்வாளராக உள்ள சோமசுந்தரம், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜெய சேகரன், ஓய்வு பெற்ற காவலர் ஜோசப்ராஜ், தற்போது உதவி ஆய்வாளராக உள்ள பிச்சையா, ஓய்வு பெற்ற காவலர் செல்லதுரை, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீரபாகு, ஓய்வு பெற்ற காவலர் சுப்பையா, ஓய்வு பெற்ற காவலர் பாலசுப்பிரமணியம் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஏழாவது நபரான ஓய்வு பெற்ற காவலர் சிவசுப்பிரமணியன் மற்றும் ஒன்பதாவது நபர் ஆன இரத்தினசாமி ஓய்வு பெற்ற காவலர் ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 


இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேபிரியல் ஆஜரானார். தீர்ப்புக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, "இவ்வழக்கின் தீர்ப்பு தாமதமாக வழங்கட்டாலும் நீதி வென்றுள்ளது. இதில் ஒரு டிஎஸ்பி, ஒரு இன்ஸ்பெக்டர் தண்டனை பெற்றுள்ளார்கள். 7பேர் பணி ஓய்வு பெற்றுள்ளார்கள் என்றார். 

தூத்துக்குடியில் 24 ஆண்டுகளுக்கு பின்பு காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் மரணம் அடைந்த வழக்கில் காவல்துறையினர் 9 பேருக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

இதுApr 5, 2025 - 07:02:14 PM | Posted IP 162.1*****

நல்ல செய்தி , அப்படியே சாத்தான்குளம் , ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடத்திய காவலர்களையும் தூக்குத் தண்டனை கொடுங்க

JagatheshApr 5, 2025 - 04:59:25 PM | Posted IP 172.7*****

அதிகாரிகள் பெயர் என்ன ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory