» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முட்டை கேட்டதால் மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர், உதவியாளர் கைது!

சனி 5, ஏப்ரல் 2025 8:38:23 AM (IST)

போளூர் அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்டபோது முட்டை வழங்கும்படி கேட்ட 5-ம் வகுப்பு மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த செங்குணம் (கொள்ளை மேடு) கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்த 2-ந்் தேதி சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவின் போது முட்டை வழங்கப்பட்டது. அப்போது 5-ம் வகுப்பு மாணவன், அங்கு சமையலர் லட்சுமியிடம் சென்று தனக்கு முட்ைட வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் உனக்கு முட்டை வழங்க முடியாது என்று கூறி சமையலர் லட்சுமியும் உதவியாளர் முனியம்மாவும் மாணவனை துடைப்பத்தால் தாக்கியுள்ளனர். இதனை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட சத்துணவு நேர்முக உதவியாளர் மற்றும் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் விரைந்து சென்று சமையலர் லட்சுமியும் உதவியாளர் முனியம்மாளையும் பணியிடை நீக்கம் செய்தனர்.

மேலும் ஊர் மக்கள் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்ததையடுத்து சமையலர் லட்சுமியும் உதவியாளர் முனியம்மாளையும் போளூர் போலீசார் கைது செய்தனர். இது ெதாடர்பாக போளூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக அங்கு பணிபுரிந்த உதவி ஆசிரியர் புளோராவை வட்டார கல்வி அலுவலர் வேறு ஊருக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory