» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வழிப்பறி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

செவ்வாய் 27, மே 2025 4:41:09 PM (IST)



வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கடந்த 22.02.2024 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா (எ) ராஜா மகன் பின்லேடன் (22) மற்றும் மணப்பாடு மீனவர்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரிய யோஸ்வின் (எ) யோசுவா (22) ஆகிய இருவரையும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் -3ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயராஜ்குமார் இன்று (27.05.2025) குற்றவாளியான பின்லேடன் மற்றும் மரிய ஜோஸ்வின் (எ) யோசுவா ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராமேஸ்வரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் செல்வராஜ் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory