» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் : நயினார் நாகேந்திரன் பேட்டி

புதன் 28, மே 2025 4:58:33 PM (IST)



தி.மு.க.,வை வீழ்த்த த.வெ.க., உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,  தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில் 'குன்றம் காக்க... கோவிலை காக்க' என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து முன்னணி சார்பில் ஜூன் 22ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அடிக்கல் பூமி பூஜை மதுரை வண்டியூரில் இன்று (மே 28) நடந்தது. தொடக்கத்தில் கோ பூஜை நடந்தது. 

விழாவில் அமைக்கப்பட்ட மாநாடு கட்டமைப்பின் மாதிரியை பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் பார்வையிட்டு கேட்டறிந்தனர்.

பின்னர் 6:58 மணிக்கு தொடங்கிய பூமி பூஜையில் முகூர்த்தக்கால் நாட்டப்பட்டது. பின்னர் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தி.மு.க.,வை வீழ்த்த த.வெ.க., உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். விஜய் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கூறிய கருத்தை வரவேற்கிறேன்.

தமிழ் கடவுள் முருகனுக்கு நடைபெறும் மாநாட்டில் ஒரு வாரம் முன்பு அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே அரசு ஒரு மாநாடு நடத்தியது. ஆனால் இந்த மாநாடு முழுமையான பக்தி உள்ள மாநாடாக அமையும். மலேசியா, சிங்கப்பூரில் இருந்து பக்தர்கள் வருவர். இது முழுக்க முழுக்க பக்தி மாநாடு. இதில் அரசியல் கிடையாது. பக்தர்களுக்காக நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory