» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒருங்கிணைந்த சேவை மையம் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு : பெண்கள் விண்ணப்பிக்கலாம்
புதன் 28, மே 2025 4:03:51 PM (IST)
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவதற்கு தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிபப்பில், "தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் மாவட்ட சமூகநல அலுவலகக் கட்டுபாட்டின் கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) செயல்பட்டு வருகிறது. அதில் சுழற்சி முறையில் பணிபுரிய தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 2 பல்நோக்கு உதவியாளர் மற்றும் கோவில்பட்டி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 1 வழக்குப்பணியாளர் போன்ற காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு மூலம் பணி நியமனம் செய்யும் பொருட்டு, உள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழக்குப் பணியாளர் (கோவில்பட்டி-1)
தகுதி: சட்டம் / சமூகப்பணி / உளவியல் / சமூகவியலில் / சமூக அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 வருட முன்அனுபவம் இருத்தல் வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் கோவில்பட்டி நகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். மாத ஊதியம் - ரூ.18000/-
பல்நோக்கு உதவியாளர் ( தூத்துக்குடி – 2)
தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் மற்றும் அலுவலகப் பராமரிப்பு பணிகள் செய்ய தெரிந்திருக்க வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாநகராட்சி / ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். மாத ஊதியம் - ரூ.10000/-
தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்கள் 15.06.2025 மாலை 5 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களின் நகலுடன் (ஆதார் அட்டை, சாதிச்சான்று, கல்விச்சான்று (10th, 12th, Degree), பணி முன் அனுபவச்சான்று, ஆதரவற்ற விதவை சான்று, முன்னாள் இராணுவத்தினர் சான்று) மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101 என்ற அலுவலக முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு தொலைபேசிஎண்: 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
வியாழன் 29, மே 2025 4:59:01 PM (IST)

மதுரை மேயரின் கணவர் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்ட்!
வியாழன் 29, மே 2025 4:25:21 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண் பாலியல் புகார் : வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
வியாழன் 29, மே 2025 3:41:33 PM (IST)

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்
வியாழன் 29, மே 2025 3:11:27 PM (IST)

கமலுக்கு கன்னட அமைப்புகள் மிரட்டல்; முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? சீமான் கேள்வி
வியாழன் 29, மே 2025 12:36:32 PM (IST)
