» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
யார் அந்த சார்? என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது: எடப்பாடி பழனிசாமி
புதன் 28, மே 2025 12:04:12 PM (IST)
விரைவில் அ.தி.மு.க. ஆட்சி அமையும். அந்த சார் "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இருப்பினும், மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, ஸ்டாலின் மாடல் அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது?
ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்? SIT-ல் பணியாற்றிய DSP ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்? உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?
இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான, இந்த வழக்கின் மூலக் கேள்வியான யார் அந்த சார்? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது! வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக ஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்?
யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது! காலம் மாறும்! காட்சிகள் மாறும்! விரைவில் அ.தி.மு.க. ஆட்சி அமையும். அந்த சார் "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்! சார்-ஐக் காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
வியாழன் 29, மே 2025 4:59:01 PM (IST)

மதுரை மேயரின் கணவர் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்ட்!
வியாழன் 29, மே 2025 4:25:21 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண் பாலியல் புகார் : வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
வியாழன் 29, மே 2025 3:41:33 PM (IST)

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்
வியாழன் 29, மே 2025 3:11:27 PM (IST)

கமலுக்கு கன்னட அமைப்புகள் மிரட்டல்; முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? சீமான் கேள்வி
வியாழன் 29, மே 2025 12:36:32 PM (IST)
