» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் குவிந்த மணமக்கள் - உறவினர்கள் : ஒரே நாளில் 18 திருமணங்கள்!

புதன் 28, மே 2025 12:20:38 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் இன்று 18 திருமணங்கள் நடைபெற்றது. ஆலய வளாகம் முழுவதும் புதுமண தம்பதிகள் மற்றும் உறவினர்களின் கூட்டம் அலைமோதியது. 

இன்று வைகாசி மாத வளர்பிறை சுப முகூர்த்த தினம் இதை முன்னிட்டு தூத்துக்குடியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதி முன்பு இன்று ஒரே நாளில் 18 திருமணங்கள் நடைபெற்றன. 

மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்த திருமணங்களால் ஆலய வளாகம் முழுவதும் பட்டு வேட்டி சேலையுடன் மாலைகளை அணிந்தபடி திருமணம் நடைபெற்ற புதுமண தம்பதிகளின் கூட்டம்  மற்றும் திருமணத்திற்கு வந்த உறவினர்களின் கூட்டத்தால் ஆலயம் முழுவதும் நிரப்பி காணப்பட்டது. 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்து தங்களது குடும்பத் திருமண நிகழ்வில் ஆலயத்தில் கலந்து கொண்டதால் அனைவரும் முகத்திலும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியும் காணப்பட்டது. இதனால் ஆலய வளாக பகுதி முழுவதும் விழாக்கோலம்  போல் காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory