» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கவின் கொலை வழக்கு : காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது; காவல் ஆய்வாளர் மீதும் புகார்
வியாழன் 31, ஜூலை 2025 10:52:43 AM (IST)

நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைதான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சுர்ஜித்தை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்தனர். அவரது பெற்றோரான சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வகணேஷின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் நெல்லை மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல் ஆய்வாளர் மீதும் புகார்
இந்த நிலையில், கவின் கொலைக்கு பாளை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் தான் வழிவகுத்து கொடுத்தார் என்று கவினின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
கவின் சென்னையில் இருந்து நெல்லை வரும் தகவலை காசி பாண்டியன் தான் சுர்ஜித்திற்கு கொடுத்தார். கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.
காசி பாண்டியனும் கொலையாளியும் ஒரே சாதியை சேர்ந்தவர் என்பதால் கட்டபஞ்சாயத்து நடத்தப்பட்டது. மேலும் காதலை கைவிடும்படி கவினை அழைத்து காசி பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்தார். காசி பாண்டியன் காவல் ஆய்வாளர் இல்லை, கூலிப்படை தலைவன். எனவே அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கவினை மிரட்டியது போல் 2023-ல் பா.ஜ.க. பிரமுகர் ஜெகன் கொலையிலும் காசிபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகார் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுற்றுலா படகு ஆன்லைன் பயணச்சீட்டு பதிவு : அமைச்சர்மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:13:59 PM (IST)

காரில் ஏற்ற மறுத்தாரா எடப்பாடி பழனிசாமி..? வீடியோவுக்கு செல்லூர் ராஜு விளக்கம்!!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:03:14 PM (IST)

கிணற்று தண்ணீரில் பெட்ரோல், டீசல் கலப்பு : மார்த்தாண்டம் அருகே பரபரப்பு
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 3:46:44 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை அப்புறப்படுத்தும் வரை போராட்டத்தில் துணை நிற்பேன்: கிருஷ்ணசாமி
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 3:23:23 PM (IST)

நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:48:05 PM (IST)

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:09:14 PM (IST)
