» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிணற்று தண்ணீரில் பெட்ரோல், டீசல் கலப்பு : மார்த்தாண்டம் அருகே பரபரப்பு

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 3:46:44 PM (IST)



மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள கீழப்பம்பம் பகுதியில் வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளில் தற்போது பெட்ரோல் வாடை வீசி வருகிறது. நேற்று முன்தினம் மாலை ஜெகன் என்பவரின் கிணற்றில் இருந்து கிடைத்த தண்ணீரில் டீசல், பெட்ரோல் கலந்திருந்தது. அந்த தண்ணீரை பற்ற வைத்தபோது தீப்பற்றி எரிந்தது. 

அந்த பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் சேமிப்பு கிடங்கில் இருந்து கசிவு ஏற்பட்டு கிணறுகளில் கலந்துள்ளதா? என நகராட்சி, சுகாதாரத் துறை, பெட்ரோலியத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில், குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆயில் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை அதிகாரிகள், பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் பெட்ரோல் பங்குகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பெட்ரோல் கசிவு குறித்து ஆய்வு முடிவில் தெரிவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவி்த்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory