» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காரில் ஏற்ற மறுத்தாரா எடப்பாடி பழனிசாமி..? வீடியோவுக்கு செல்லூர் ராஜு விளக்கம்!!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:03:14 PM (IST)
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய காரில் செல்லூர் ராஜுவை ஏற்க மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்துக்கு கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். அங்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொருள்களை பார்வையிட்டார். இதற்காக, அவர் மதுரையிலியிருந்து சிவகங்கைக்கு காரில் புறப்பட்ட போது, எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய காரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை ஏற்ற மறுத்ததாக வீடியோக்கள் வெளியாகியிருந்தன.
சமூக வலைத்தளங்களில் வெளியான விடியோக்களில், எடப்பாடி பழனிசாமி, முன் இருக்கையில் அமர்ந்திருந்த காரில், செல்லூர் ராஜூ ஏறுவதற்குத் தயாரானார். ஆனால் அதனைப் பார்த்த பழனிசாமி, வேண்டாம் வேண்டாம், வேறு காரில் செல்லுங்கள் என்று கூறினார்.
இந்த வீடியோ வைரலாகி, கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பழனிசாமி, செல்லூர் ராஜூவை தன்னுடைய காரில் ஏற்ற மறுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், உண்மை அவ்வாறு இல்லை என்றும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே வேறு காரில் சென்றதாக செல்லூர் ராஜு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய் பிரிவில் இருந்து இசட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு பாதுகாப்பு அதிகரித்துள்ள காரணத்தால், எடப்பாடி பழனிசாமி இருந்த காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால்தான், தன்னை காரில் ஏற வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். வேறு காரில் வருமாறும் கூறியதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஏற்கனவே காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால்தான் தன்னை காரில் ஏற்றவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில உரிமைகளை விட்டுத்தராத போக்கு தொடர வேண்டும் : முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:44:57 AM (IST)

உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி: டிசம்பரில் 2வது அலகு சோதனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:46:37 AM (IST)

நான் பேசும் விதத்தை வைத்து என்னை கிண்டல் செய்வதா? நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:05:53 AM (IST)

சதுரகிரி மலையில் காட்டுத்தீ: ஆடி அமாவாசை திருவிழாவிற்குப் பக்தர்கள் செல்லத் தடை - ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:50:02 AM (IST)

வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:35:18 AM (IST)

ஆதரவாளர்கள் கையில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்: நடிகர் சரத்குமார் விருப்பம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:45:19 PM (IST)


