» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கழிவுமீன் நிறுவனங்களை அப்புறப்படுத்தும் வரை போராட்டத்தில் துணை நிற்பேன்: கிருஷ்ணசாமி

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 3:23:23 PM (IST)



பொட்டலூரணி கழிவுமீன் நிறுவனங்களை அப்புறப்படுத்தும் போராட்டத்தில் கடைசி வரையும் துணை நிற்பேன் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணியைச் சுற்றிலும் மூன்று கழிவுமீன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக பொதுமக்கள் நான்கு ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம், கூட்டம், பாராளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு, மாதக்கூடல், நாள்கூடல் எனப் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இந்த நிலையில், பொட்டலூரணியில் 451 ஆவது நாள் கூடல் சிறப்பு நிகழ்ச்சி பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். பெருஞ்சித்திரனார் படிப்பகத்தின் பொறுப்பாளர் சங்கரநாராயணன் அறிமுக உரையாற்றினார். 

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவர்தம் உரையில், "பொதுமக்களுக்கு நல்ல காற்றையும் குடிநீரையும் கொடுக்க வேண்டியது அரசின் கடமை ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பாக அதனால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்று ஆராய்ந்து கொடுக்க வேண்டும்.

பொட்டலூரணி மக்கள் மட்டுமல்லாமல் இவ்வட்டாரத்திலுள்ள மக்களையும் இணைத்துக் கொண்டு போராட நடவடிக்கை எடுப்போம். துர்நாற்றம் வீசுகின்ற மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் அப்புறப்படுத்தும் போராட்டத்தில் நான் கடைசி வரையும் துணை நிற்பேன்” என்றார். மாவட்ட செயலாளர் இரமேஷ்குமார், பூவாணி தங்கராஜ், மற்றும் திரளான ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொறுப்பாளர் பால்ராஜ் நன்றிகூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory