» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 8:45:24 AM (IST)



தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.  இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் நடந்து வருகிறது. விழாவில் 6-வது நாளான நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு இரண்டாம் திருப்பலி, 6.30 மணிக்கு லயன்ஸ்டவுன் பங்கு மக்கள், 7.30 மணிக்கு ஏசுசபை துறவியர், புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி, 8.30 மணிக்கு டி.சவேரியார்புரம் பங்கு மக்கள், 9.30 மணிக்கு சமூக பணியாளர்களுக்கான திருப்பலி நடந்தது. 

காலை 11 மணிக்கு லூசியா நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனுடையோருக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு கப்பல், தோணி மாலுமிகள், கடல் தொழிலாளர்களுக்கான திருப்பலி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

விழாவை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுநன்மை திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது 4-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கர்தினால் அந்தோணி பூலா தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. 5-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி, இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory