» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாலிபர் கொன்று புதைப்பு..? போலீசார் விசாரணை

வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 8:55:06 AM (IST)

தூத்துக்குடி உப்பாற்று ஓடை பண்டு கரை பகுதியில் வாலிபர் கொன்று புதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ரோட்டில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தின் பின்புறம் உப்பாற்று ஓடை பண்டு கரை பகுதியில் சில நாய்கள் ஏதோ ஒன்றை கடித்து குதறிக் கொண்டு இருந்தன. இதனை அந்த பகுதியில் சென்றவர்கள் பார்த்தனர். உடனடியாக அருகில் சென்று பார்த்தபோது, அந்த நாய் ஒரு மனித கையை கடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. 

இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு 31 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உடல் புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி தாசில்தார் முரளிதரன் வருவாய் ஆய்வாளர் செல்வ லட்சுமி கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். புதைக்கப்பட்ட உடல் இன்று (வெள்ளிக்கிழமை) தோண்டி எடுக்கப்பட உள்ளது. அதன் பிறகே இறந்தவர் யார்?, எப்படி கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory