» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரும் போராட்டம்: அண்ணாமலை ஆதரவு

செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 3:56:55 PM (IST)

பொட்டலூரணியில் உள்ள மீன் கழிவு ஆலைகளை மூட வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியைச் சுற்றியுள்ள மூன்று கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரியும், பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும் நாம் நடத்தும் போராட்டத்திற்குப் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் க.அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மூன்று மீன் கழிவு ஆலைகளால், கடந்த நான்கு ஆண்டுகளாக, அந்தப் பகுதியில் மண்வளம், நிலத்தடி நீர் மற்றும் காற்று ஆகியவை மாசுபட்டு, பொதுமக்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த ஆலைகளை மூடக்கோரி, பலமுறை கோரிக்கை விடுத்தும், திமுக அரசு கண்டுகொள்ளாததால், கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலையும் புறக்கணித்து, போராட்டம் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்கள், இளைஞர்கள் மீதே திமுக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனை அடுத்து, கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல், சுமார் 450 நாட்களுக்கும் மேலாக, சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரி, பொட்டலூரணி பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனால், திமுக அரசோ, அமைச்சர்களோ, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களோ, யாரும் இந்த மக்களைக் கண்டுகொள்ளவில்லை. காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கும் திமுகவின் செயல்பாடு வன்மையான கண்டனத்துக்குரியது. 

தனது கட்சிக்காரர்கள் சம்பாதிக்க, பொதுமக்கள் நல்வாழ்வைப் பணயம் வைக்கும் அலட்சியப் போக்கை, முதலமைச்சர் திரு @mkstalin நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, பொட்டலூரணி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory