» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்க கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 5:13:20 PM (IST)
ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக கூறி ரத்து செய்யப்பட்ட வாகன ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக் கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தாலே புதிய லைசென்ஸ் வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடலாம் என்ற நிலையில் தனது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டதாக கூறினார். எனவே, புதிய லைசென்ஸ் வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
ஆறு மாதங்கள் கடந்து விட்டால் லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றில்லை, உரிய அதிகாரிகளை அணுகலாம் எனக் கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:46:51 PM (IST)

நாகர்கோவில் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை : எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதன் 13, ஆகஸ்ட் 2025 12:31:22 PM (IST)

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் சம்பவம் குறித்து உரிய விசாரணை : இபிஎஸ் வலியுறுத்தல்!
புதன் 13, ஆகஸ்ட் 2025 12:01:11 PM (IST)

திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு: ரஜினிக்கு துணை முதல்வர், முன்னாள் முதல்வர் வாழ்த்து
புதன் 13, ஆகஸ்ட் 2025 11:22:10 AM (IST)

தூத்துக்குடியில் நிதி நிறுவனத்தில் ரூ.6லட்சம் பணம் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை
புதன் 13, ஆகஸ்ட் 2025 10:57:48 AM (IST)

மாநகராட்சியில் முறைகேடு: கைதான மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி!
புதன் 13, ஆகஸ்ட் 2025 10:53:46 AM (IST)
