» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டி தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி முழு உருவ சிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதன் 29, அக்டோபர் 2025 8:15:38 AM (IST)



கோவில்பட்டி நகர தி.மு.க. புதிய அலுவலகத்தில் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர தி.மு.க. புதிய அலுவலகம் கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் முன்பகுதியில் 8 அடி உயர பீடத்தின் மீது மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. மேலும், அங்கு கலைஞர் அறிவகம் என்ற பெயரில் நூலகமும் அமைக்கப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி நகர தி.மு.க. புதிய அலுவலக திறப்பு விழா நேற்று இரவில் நடைபெற்றது. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலை வகித்தார். விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். 

பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டிக்கு வந்தார். விழாவில் பங்கேற்று கோவில்பட்டி நகர தி.மு.க. புதிய அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிலையின் முன்பு வைக்கப்பட்டு இருந்த அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் நகர தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர், கலைஞர் அறிவகம் நூலகத்துக்கு சென்று பார்வையிட்டார். நூலக வருகை பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் செண்டைமேளம் முழங்கவும், வாணவேடிக்கை நிகழ்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவருக்கு கனிமொழி எம்.பி. பொன்னாடை வழங்கியும், அமைச்சர் கீதாஜீவன் வெள்ளி செங்கோல் பரிசு வழங்கியும், நகராட்சி தலைவரும், மேற்கு நகர செயலாளருமான கருணாநிதி வெள்ளிமயில் படம் நினைவு பரிசாக வழங்கியும் வரவேற்றனர்.

முன்னதாக கோவில்பட்டி நகர தி.மு.க. அலுவலகம் கட்டிய என்ஜினீயர் ராமச்சந்திரன், அலுவலகம் கட்டுவதற்கு நிலம் வழங்கிய கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உறுப்பினர் கே.ஆர்.ஏ.நிதிஷ்ராம் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி கிழக்கு நகர பொறுப்பாளர் மு.சுரேஷ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory