» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ரூ.17.5 லட்சம் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:15:24 AM (IST)

மதுரையில் சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ரூ.17.5 லட்சம் குறித்து கேரளாவை சேர்ந்த வியாபாரியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதியில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தளவாய் தெரு பகுதியில் சாலையோரத்தில் ஒரு மூடை கிடந்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த செல்வமாலினி (வயது 46) என்பவர் கண்டார். அருகில் சென்று பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அந்த பண மூடையை எடுத்து விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அதில் பார்த்தபோது ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. சாலையில் கிடந்த பணத்தை பத்திரமாக போலீசில் ஒப்படைத்த செல்வமாலினியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.மேலும் இந்த பணத்தை யார் விட்டு சென்றார்கள் என்பது தொடர்பாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, அந்த பணத்தை வருமான வரித் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அந்த பணம், கேரளாவை சேர்ந்த பேட்டரி வியாபாரி ஒருவருக்கு சொந்தமானது எனவும், அவர் மதுரைக்கு வந்து சென்றபோது பணத்தை தவறவிட்டதாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து பணத்திற்கான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த வியாபாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)

உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% ஆக உயர்வு : கனிமொழி எம்பி வாழ்த்து!
புதன் 29, அக்டோபர் 2025 4:20:54 PM (IST)

திமுக ஆட்சியில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று பணி நியமனம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
புதன் 29, அக்டோபர் 2025 4:09:37 PM (IST)

தவெக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 4:00:39 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 29, அக்டோபர் 2025 3:49:23 PM (IST)

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் கள்ளச் சந்தையில் பாஸ் விற்பனை? காவல்துறை விளக்கம்
புதன் 29, அக்டோபர் 2025 3:09:21 PM (IST)




