» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் தப்பி ஓடியதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சியில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களில் 2-வது சிவாலயமாக விளங்குகிறது. இக்கோவிலில் கடந்த 6-ந் தேதி மாலையில் தலைமை அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி கோவில் நடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை அவர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவிலில் உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. ஆனால் அதில் இருந்த காணிக்கை திருட்டு போகவில்லை. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்போில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெள்ளாங்கோடு சரல் விளையை சேர்ந்த மனோஜ் (வயது 29) என்பதும், திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் கோவில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து இரும்பு கம்பியால் உண்டியல் பூட்டை உடைத்துள்ளார்.
அப்போது கருவறை பகுதியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதால் பயந்துபோன அவர் காணிக்கை பணத்தை எடுக்காமல் தப்பி ஓடியதாகவும், மது குடிக்க பணம் இல்லாததால் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து மனோஜை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: தலைமை டி.ஜி.பி.யை நியமிக்க இபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:27:41 AM (IST)

கட்சி தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் ஆகவில்லை: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:28:06 AM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:20:41 AM (IST)

மோசடி வழக்கில் சிறிய தொகைக்காக வங்கிக்கணக்கை ஒட்டுமொத்தமாக முடக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:18:45 AM (IST)

தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சனி 8, நவம்பர் 2025 12:45:48 PM (IST)

குமரியில் கொட்டி தீர்த்த மழையால் பயிர் நடவு பணி தீவிரம் : விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 8, நவம்பர் 2025 11:49:34 AM (IST)




