» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: தலைமை டி.ஜி.பி.யை நியமிக்க இபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:27:41 AM (IST)
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுள்ளதாகவும், தலைமை டி.ஜி.பி.யை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி, 54 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா? என்றே தெரியவில்லை. குறிப்பாக, சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாரும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கொடுமையின் உச்சம்.அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்ட தமிழக போலீஸ்துறை தற்போது, நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சரின் செயல்பாடற்ற நிலையினால் சீர்கெட்டிருப்பது வேதனையான ஒன்று. தமிழ்நாட்டில் கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கடந்த 4 மாதங்களில் சுமார் 501 கொலைகளும், சுமார் 156 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
தமிழகத்தில் டி.ஜி.பி.யை நியமிக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும், இன்றுவரை இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 4½ ஆண்டு கால நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தோல்வி. குறிப்பாக, மக்களைக் காக்கும் சட்டம்-ஒழுங்கின் தோல்வியால் தமிழகம் பாதிப்படைந்து வருவதை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் வகையில், காவல் துறை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்துவதோடு, மத்திய தேர்வாணைய விதிகளின்படி, அவர்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து ஒரு மூத்த போலீஸ்துறை அதிகாரியை தலைமை டி.ஜி.பி.யாக உடனடியாக நியமனம் செய்ய வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)

கட்சி தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் ஆகவில்லை: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:28:06 AM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:20:41 AM (IST)

மோசடி வழக்கில் சிறிய தொகைக்காக வங்கிக்கணக்கை ஒட்டுமொத்தமாக முடக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:18:45 AM (IST)

தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சனி 8, நவம்பர் 2025 12:45:48 PM (IST)

குமரியில் கொட்டி தீர்த்த மழையால் பயிர் நடவு பணி தீவிரம் : விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 8, நவம்பர் 2025 11:49:34 AM (IST)




