» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
லஞ்சம், ஊழலற்ற நிர்வாகம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் அறிவுறுத்தல்!
திங்கள் 29, ஜூன் 2026 5:06:27 PM (IST)

சென்னையில் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு இன்று தலைமைச் செயலகத்தில் துவங்கியது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முக்கிய அதிகாரிகள் மாநாடு இதுவாகும்.
இன்றும் நாளையும் (ஜூன் 29, 30) நடைபெறும் இந்த மாநாடு மொத்தம் மூன்று அமர்வுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் அமர்வில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட எஸ்பிக்கள் பங்கேற்றுள்ளனர். புதிய அரசு பொறுப்பேற்றது முதல் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் துறைச் செயலாளர்கள் மட்டத்தில் பல்வேறு இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த மாநாட்டில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உத்திகள் மற்றும் தற்போதைய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
மாநாட்டின் இறுதி நாளான நாளை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு முதல்வர் விஜய் முக்கிய அறிவுரைகளை வழங்கவுள்ளார். குறிப்பாக, மக்களுக்கு லஞ்சமற்ற, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவது மற்றும் சட்டம் - ஒழுங்கைப் பாரபட்சமின்றிப் பராமரிப்பது குறித்து அதிகாரிகளுக்குப் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் கைபேசி தடை உத்தரவு மேலும் தீவிரம்; மீறினால் பறிமுதல்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:28:30 PM (IST)

அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன்: எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:19:59 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)

ஆராய்ச்சிப் பணிக்காக ரேடியோ காலர் பொருத்தப்பட்ட கழுகு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:55:29 PM (IST)

தூத்துக்குடி மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள மரங்கள் சேதம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:34:45 PM (IST)

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)


