» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

செவ்வாய் 30, ஜூன் 2026 12:50:17 PM (IST)

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், தனது அரசியல் வருகை குறித்த இறுதி முடிவை மக்களின் கருத்துகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்க உள்ளதாகவும் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், தனது திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதற்கு விளக்கம் அளித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "தான் திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை" என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், சில வாரங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரலாமா என்று பொதுமக்களிடம் கருத்துக்கேட்டது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள அவர், தன் மீது அக்கறை கொண்ட மக்களிடம் அனுமதி கேட்பதையே தான் விரும்புவதாகவும், மக்கள் தனது அறக்கட்டளைப் பணிகளை மட்டும் தொடருமாறு அறிவுறுத்தினால் அதன்படியே செயல்படத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தான் குறிப்பிட்ட தெரு நாய்கள் விவகாரம் சர்ச்சையானதற்கு ஏற்கனவே எக்ஸ் (X) தளத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளதை நினைவு கூர்ந்தார். அத்துடன், தான் ஏழை எளிய மக்களுக்குச் செய்து வரும் சமூக நலத்திட்டங்களை முதலீடாகக் காட்டி அரசியலுக்கு வர விரும்பவில்லை என்றும், இதுவரை தான் அரசியலுக்கு வருவதாக இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். தன் மீதான தேவையற்ற எதிர்மறை விமர்சனங்களைத் தவிர்க்குமாறும் அவர் அந்தப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

BalaJun 30, 2026 - 05:17:38 PM | Posted IP 104.2*****

Adicha adi appadi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory