» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள மரங்கள் சேதம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:34:45 PM (IST)

தூத்துக்குடி துறைமுக சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மர அறுவை ஆலையின் சேமிப்புக் கிடங்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 400 டன் மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
தூத்துக்குடி துறைமுக சாலையில் அமைந்துள்ள 'ஜான் சா மில்' என்ற தனியார் மர அறுவை ஆலையின் சேமிப்புக் கிடங்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 400 டன் மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
இந்த ஆலையின் வளாகத்தில் மொத்தம் 2 லட்சம் டன் அளவிலான மரங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு பகுதியில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டு, தீ வேகமாகப் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீயை அணைக்கும் பணியில் தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலைய வாகனம், தூத்துக்குடி தீயணைப்பு நிலைய வாகனம், தூத்துக்குடி அனல்மின் நிலைய வாகனம், வ.உ.சி துறைமுக தீயணைப்பு வாகனம் மற்றும் ஸ்பிக் தனியார் நிறுவன தீயணைப்பு வாகனம் என மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
இந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளைத் தூத்துக்குடி மாவட்ட உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி, தூத்துக்குடி நிலைய உதவி அலுவலர் கோமதி அமுதா, சிப்காட் நிலைய போக்குவரத்து அலுவலர் புன்னவனக்கட்டி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் வளாகத்தில் இருந்த 400 டன் மரங்கள் முழுமையாக எரிந்துள்ளதால், சேத மதிப்பு பல கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்துப் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் கைபேசி தடை உத்தரவு மேலும் தீவிரம்; மீறினால் பறிமுதல்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:28:30 PM (IST)

அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன்: எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:19:59 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)

ஆராய்ச்சிப் பணிக்காக ரேடியோ காலர் பொருத்தப்பட்ட கழுகு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:55:29 PM (IST)

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
செவ்வாய் 30, ஜூன் 2026 12:50:17 PM (IST)


