» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செந்தில் பாலாஜி வீடு உள்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: கரூரில் பரபரப்பு!
புதன் 29, ஜூலை 2026 11:34:34 AM (IST)
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தது, டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ. 1,000 கோடி முறைகேடு செய்தது மற்றும் மின்சாரத் துறைக்கு டிரான்ஸ்ஃபார்மர்கள் வாங்கியதில் ரூ. 397 கோடி முறைகேடு செய்தது உட்படப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், தவெக அரசை கவிழ்க்கச் சதித்திட்டம் தீட்டியது தொடர்பான விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது வீட்டில் இருந்த அவரது பெற்றோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், செந்தில் பாலாஜியின் உதவியாளர்களான சுப்பிரமணி, பாஸ்கரன் ஆகியோரின் வீடுகள், கரூர் கோதை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கார்த்திக் என்பவரது வீடு மற்றும் கரூர் தொழில்பேட்டையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் என கரூரில் மொத்தம் 6 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாகச் சென்னை, கரூர் உட்படத் தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாகத் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எம்பி டி.ஆர். பாலுவிற்குச் சொந்தமான மதுபானத் தொழிற்சாலை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாகோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலை மற்றும் சிவகங்கையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி திருவிழா: நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில் இயக்க பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 29, ஜூலை 2026 5:41:23 PM (IST)

அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி : முதலமைச்சரிடம் அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரை!
புதன் 29, ஜூலை 2026 5:10:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து நிலைய பணிகள்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
புதன் 29, ஜூலை 2026 4:12:41 PM (IST)

டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம்? - தமிழ்நாடு அரசு பரிசீலனை!
புதன் 29, ஜூலை 2026 4:02:08 PM (IST)

தவெக நிர்வாகி மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காத காவல்துறை - பாஜக கண்டனம்!
புதன் 29, ஜூலை 2026 3:34:02 PM (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க இளையராஜா அழைப்பு!
புதன் 29, ஜூலை 2026 12:18:38 PM (IST)


