» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்: செவிலியர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!
புதன் 29, ஜூலை 2026 11:47:56 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து 22 வயது பெண் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ். இவரது மகள் ஆஷிகா (22). இவர் வெட்டுவெந்நியில் இயங்கி வரும் ஒரு தனியார் கண் மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களாகச் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பணி நேரத்தில் மருத்துவமனையின் மாடியில் இருந்து ஆஷிகா திடீரெனக் கீழே விழுந்து பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.உயிரிழந்த ஆஷிகாவிற்கு அண்மையில்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி 4-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், இதுகுறித்து முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் எனப் போலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி திருவிழா: நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில் இயக்க பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 29, ஜூலை 2026 5:41:23 PM (IST)

அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி : முதலமைச்சரிடம் அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரை!
புதன் 29, ஜூலை 2026 5:10:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து நிலைய பணிகள்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
புதன் 29, ஜூலை 2026 4:12:41 PM (IST)

டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம்? - தமிழ்நாடு அரசு பரிசீலனை!
புதன் 29, ஜூலை 2026 4:02:08 PM (IST)

தவெக நிர்வாகி மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காத காவல்துறை - பாஜக கண்டனம்!
புதன் 29, ஜூலை 2026 3:34:02 PM (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க இளையராஜா அழைப்பு!
புதன் 29, ஜூலை 2026 12:18:38 PM (IST)


