» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி : முதலமைச்சரிடம் அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரை!

புதன் 29, ஜூலை 2026 5:10:33 PM (IST)

chickenBiryanicm.jpg

அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதன் விவரம்: "அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளேன். இது பல துறைகள் சம்பந்தப்பட்டது என்பதால், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்."

தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தான் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம், அதுவே தவெகவின் நிலைப்பாடு. ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படலாம். ஆனால் தவெகவின் நிகழ்ச்சிகள் என்றுமே தமிழ்த்தாய் வாழ்த்தோடுதான் தொடங்கும்."

திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் கொண்டு வரப்பட்ட மக்களுக்கான நல்ல திட்டங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படாது. உதாரணமாக, அம்மா உணவகங்களின் தரம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. நல்ல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு வருவதில்தான் போட்டி இருக்கும்.

தனியார் பள்ளிகள் கட்டணத்தைக் குறைக்கத் தவறினால், ஏற்கனவே உள்ள கட்டண நிர்ணயக் குழு மறு கட்டமைப்பு செய்யப்படும். அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்யக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இத்துடன், எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களைச் சுயபரிசோதனை செய்து மக்கள் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory