» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக நிர்வாகி மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காத காவல்துறை - பாஜக கண்டனம்!
புதன் 29, ஜூலை 2026 3:34:02 PM (IST)
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது பெண் குழந்தையையும் பாலியல் ரீதியாக விமர்சித்ததாகவும் தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும் கூட, இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், தமிழகக் காவல்துறையின் நேர்மையின் மீதும், அதைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதலமைச்சரின் நிர்வாகத் திறன் மீதும் கடும் சந்தேகத்தை எழுப்புகிறது.
எனவே, தனது சொந்தக் கட்சிக்குள் இத்தனை காமுகர்களைப் பாதுகாத்து வைத்துக்கொண்டு, பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாகச் சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி திருவிழா: நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில் இயக்க பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 29, ஜூலை 2026 5:41:23 PM (IST)

அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி : முதலமைச்சரிடம் அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரை!
புதன் 29, ஜூலை 2026 5:10:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து நிலைய பணிகள்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
புதன் 29, ஜூலை 2026 4:12:41 PM (IST)

டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம்? - தமிழ்நாடு அரசு பரிசீலனை!
புதன் 29, ஜூலை 2026 4:02:08 PM (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க இளையராஜா அழைப்பு!
புதன் 29, ஜூலை 2026 12:18:38 PM (IST)

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்: செவிலியர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!
புதன் 29, ஜூலை 2026 11:47:56 AM (IST)


