» சினிமா » செய்திகள்
சல்மான் கான் - நயன்தாரா கூட்டணியின் புதிய படம்: ஈகைத் திருநாளுக்கு வெளியீடு!
சனி 25, ஏப்ரல் 2026 11:55:40 AM (IST)

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'வாரிசு' படப்புகழ் இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், 'வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்' சார்பில் தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. தற்காலிகமாக 'SVC 63' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இந்நிலையில், இந்தப் படம் 2027-ஆம் ஆண்டு ஈகைத் திருநாள் (ரம்ஜான்) பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இது குறித்து சல்மான் கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையுடன் யோசிக்க வேண்டும், அதனால் தான் இப்போதே 2027 ஈகைத் திருநாள் வெளியீட்டை அறிவித்துள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகத் திகழும் நயன்தாரா, ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ஷாரூக் கானுடன் 'ஜவான்' படத்தில் நடித்து ஹிந்தியில் தடம் பதித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சல்மான் கானுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான சிரஞ்சீவியின் 'மன சங்கர வர பிரசாத் கரு' (Mana Shankara Vara Prasad Garu) திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' மற்றும் 'ராகாயே' போன்ற முக்கியப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் 'SVC 63' திரைப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க!" - 'ராயன்' தேசிய விருது சர்ச்சைக்கு நடிகர் தனுஷ் ஆதங்கம்!
திங்கள் 27, ஜூலை 2026 4:53:22 PM (IST)

50 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்குகளில் முதல்வரின் திரைப்படம்: எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய் சாதனை!
வியாழன் 23, ஜூலை 2026 4:51:10 PM (IST)

நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை அக்-1ல் ரிலீஸ்
புதன் 22, ஜூலை 2026 5:54:13 PM (IST)

கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!
சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

ஜனநாயகன்’ பட வெளியீட்டைத் திருவிழா போல் கொண்டாட வேண்டும்: ஆனந்த் அறிவுறுத்தல்!
சனி 18, ஜூலை 2026 4:16:27 PM (IST)

