திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (22 of 53)
நோய் தீர்க்கும் மூலிகைச் செடிகள்
மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் வெடதழை, கீழாநல்லி, சிறுகுறிஞ்சான் போன்ற மருத்துவக் குணம் கொண்ட செடிகள் இங்கு உள்ளது. அது மட்டுமல்லாமல் ஓமவல்லி என்னும் ஆஸ்துமாவை குணப்படுத்தக்கூடிய மூலிகை தாமிரபரணி நதிக்கரையில் கிடைக்கிறது. திருபுடைமருதூர் பகுதியில் கிடைக்கும் நீர் வவ்வால் என்னும் மூலிகை செடி கொட்டைசாறு எடுத்து குடித்தால் ஆரம்ப கால குஷ்ட நோய்கள் குணமாகும் என்று கூறப்படுகிறது.
துண்டான கால்கள் ஒட்டிய அதிசயம்
ஒரு சமயம் பொதிகையடியில் வாழும் குழுவினர் ஒரு பெரியவர் தலைமையில் காட்டுக்குள் உள்ள பகுதியில் மரம் வெட்டுவதற்காக சென்றனர். மரம் வெட்டுவதற்கு மிகவும் கூர்மையான தீட்டப்பட்ட அரிவாள் வைத்து இருந்தனர். பக்கம் பக்கமாக மரங்கள் இருந்தன. அந்த குழுவினர் வேக வேகமாக மரத்தினை வெட்டிச் சாய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஒருவரது காலில் அரிவாள் வேகமாக வெட்டியது. அதில் கால் துண்டானது. உடனே பதட்டமடைந்த அந்த குழுவினரின் தலைவர் அங்கு கிடந்த ஒரு கொடியை எடுத்து வெட்டப்பட்ட காலை கட்டினார். பின் அவரை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு ரோட்டை நோக்கி ஓடி வந்தனர். வரும் வழியில் கொடிகளுக்கு இடையே நுழைந்து ஓடிவந்தனர். மெயின் ரோட்டில் கொண்டு வந்து கிடத்திய போது வெட்டப்பட்ட கால் பொருந்தி இருந்தது.
அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதற்குக் காரணம் என்ன என்று ஆராயும் போது வெட்டப்பட்ட இடத்தில் கட்டிய கொடி மருத்துவக் குணம் வாய்ந்தது. வெட்டப்பட்ட காலை ஒட்ட வைக்கும் தன்மை அந்த கொடிக்கு உள்ளது என்று மூலிகை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் கூறினார்களாம்.
இதே போல் பல செவிவழி கதைகள் நடந்ததாக கூறப்படும் இடங்களில் பேராண்மை உள்பட பல திரைப்படம் எடுத்து இருக்கிறார்கள். மறைந்த வரலாற்று எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய மூங்கில் கோட்டை என்னும் நாவல் கூட முழுக்க முழுக்க தாமிரபரணி கரையில் பொதிகை மலையில் உள்ள பாண்டிய கோட்டையை மையமாக வைத்து தான் எழுதினார். இக்கோவில் தற்சமயம் பாழடைந்து கிடக்கிறது.
இந்த பங்களாவில் வெள்ளிக்கிழமை தோறும் யாரோ சிம்னி விளக்கு பற்ற வைக்கிறார்கள். யார் அந்த சிம்னி விளக்கை பற்ற வைக்கிறார்கள். அதைக் கண்டுபிடிக்க ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு பாண்டிய கோட்டைக்கு சென்றார். அவர் மறுநாள் காலை பிணமாக கிடந்தார்.