» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி - கொல்கத்தா வந்தேபாரத் ரயில் : மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!

திங்கள் 7, அக்டோபர் 2024 11:00:41 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து கொல்கத்தா வரை வந்தேபாரத் ஸ்லீப்பர் இரயிலை இயக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகனிடம் பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

இது தொடர்பாக பாரதிய ஜனதாகட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அளித்துள்ள மனுவில், "தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டமானது வணிகம் மற்றும் உற்பத்தியில் சிறந்து விளங்கி வரும் வேலையில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் தொழில் நிமித்தமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். 

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன்சுற்று வட்டாரத்தைச் சார்ந்த பொதுத்துறை வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் போன்ற பல்வேறு தரப்பு மக்கள் தொழில் மற்றும் வணிகம் காரணங்களுக்காக வேறு மாநிலங்களுக்குச் சென்று வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு காரத்திற்காக நாட்டின் பிற பகுதிகளுக்கு பயணிக்கும் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கொல்கத்தா போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் கன்னியாகுமரியில் இருந்து வாரம் ஒருமுறை மட்டும் இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (126664) இரயிலை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதுள்ளது. 

எனவே தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் விதமாக தூத்துக்குடியில் இருந்து திருச்சி, சென்னை, நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டனம், புவனேஸ்வர், பாலேஷ்வர், கொல்கத்தாவின் ஹவுரா அல்லது சாலிமர் வரை செல்லும் வகையில் வந்தேபாரத் ஸ்லீப்பர் இரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

இதில் பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேச சென்ன கேசவன்,  மாவட்டபொதுச்செயலாலர் ராஜா, ஓபிசி அணி மாநிலதுனைதலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட செயலாலர் வீரமணி, இளைஞரணி மாவட்ட துனை தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டணர்.


மக்கள் கருத்து

Sakthivel @ TuticorinOct 7, 2024 - 06:22:00 PM | Posted IP 172.7*****

Very very useful for Thoothukudi people go to Chennai Thank you for your memorandum due to pearl City express go Chennai all days waiting list are high

தேசபக்தன்Oct 7, 2024 - 11:16:48 AM | Posted IP 162.1*****

சூப்பர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

திங்கள் 30, டிசம்பர் 2024 4:59:25 PM (IST)

Sponsored Ads




Tirunelveli Business Directory