» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவதே இலக்கு: அதிமுக மாவட்ட செயலாளர் பேச்சு!
திங்கள் 7, அக்டோபர் 2024 3:36:51 PM (IST)
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவதே இலக்கு என தூத்துக்குடியில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேசினார்.
தூத்துக்குடி அன்னதாய் திருமண மண்டபத்தில் வடக்கு பகுதி பொறுப்பாளரும் முன்னாள் கவுன்சிலருமான செண்பகச் செல்வன் தலைமையில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார்க்கவும்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் பிரபு, மாவட்ட மாணவரணி செயலாளர் வில்லா விக்னேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரும் வட்டச் செயலாளருமான முனியசாமி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் அலெக்ஸ்ஜி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி கே கே.கே.பி. விஜயன், மகாராஜன் பகுதி துணைச் செயலாளர் நிர்மலாதேவி, வட்டச் செயலாளர்கள் சொக்கலிங்கம், ராமச்சந்திரன், டேவிட் ஏசுவடியான், பாக்கியராஜ், ஜெரால்டு, அருண் ஜெயக்குமார், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுதி கழக அவை தலைவரும் தலைமைக் கழக பேச்சாளருமான முருகானந்தம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தலைமைக் கழகம் சார்பில் சிறப்பு அழைப்பாளராக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.ஜி. ராஜேந்திரன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் மாநகர எஸ்பி சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பெயரில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவின் உறுப்பினர் உரிமைச் சட்டிற்கு விண்ணப்பித்த ஒவ்வொரு தொண்டனுக்கும் வீடு தேடி உறுப்பினர் அட்டையை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார் அதனை கண்காணிக்கவும் நிர்வாகிகளை நியமனம் செய்து மாவட்டம் தோறும் கூட்டம் நடத்த உத்தரவிட்டார்.
தொண்டர்களின் வீட்டுக்கே சென்று உறுப்பினர் அட்டைகளை வழங்கும் பணி இதுவே முதல் முறையாகும். அதிமுக உறுப்பினர்கள் இப்போதே 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பணியை துவங்க வேண்டும் மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் அம்மாவின் வரியில்லாத ஆட்சியை எடப்பாடி பழனிசாமி எப்படி நடத்தினார் என்பதையும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 40 மாதத்தில் பன்மடங்கு சொத்து வரி வீட்டு வரி மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் வரிகள் உயர்த்தப்படும் என்று கூறியதை கண்டித்த தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. பலமுறை ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தியும் விடியா திமுக அரசு தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருகிறது. நல்லது செய்வதாக பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக முதலமைச்சர் மு க ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பணியை இப்போதே துவங்குங்கள் 2026ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவதே இலக்கு என்று பேசினார்.
இந்நிகழ்வில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர்கள் பெருமாள் சாமி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் இரா.ஹென்றி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இரா. சுதாகர், பகுதிச் செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், ஜெய் கணேஷ், முன்னாள் கவுன்சிலர் சுடலைமணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், உள்ளிட்ட பெருந்திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏழை எளிய மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித் தொகையும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் மருத்துவ செலவிற்கு மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின போது ஐந்தாவது வார்டு இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் செல்வகுமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் முன்னிலையில் இணைத்துக் கொண்டார். முடிவில் மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும் வட்ட பிரதிநிதியுமான சனிக்குலாஸ் நன்றி கூறினார்.
podhu janamOct 7, 2024 - 04:03:38 PM | Posted IP 162.1*****