» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக் கொலை: 4பேர் கும்பல் வெறிச்செயல்!
வெள்ளி 20, டிசம்பர் 2024 11:50:49 AM (IST)
நெல்லையில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவர் காத்திருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாயாண்டியை சுற்றி வளைத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை துரத்தி சென்றது. நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வாசலுக்கு வந்தபோது மாயாண்டியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வாலிபர் ஒருவரை 4 பேர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
SivaSriDec 20, 2024 - 12:21:08 PM | Posted IP 172.7*****