» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: ஜன.27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சனி 11, ஜனவரி 2025 12:05:45 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பல்வேறு  பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா)- 1 மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர்-2 ஆகிய பணியிடங்களை ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் கீழ்க்காணும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியின் பெயர் பாதுகாப்பு அலுவலர் (ஒரு பணியிடம்)

தகுதி:  சமூகப்பணி/சமூகவியல்/குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமுதாய வள மேலாண்மை இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட முதுகலைப்பட்டம் 

அல்லது சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் இளநிலை பட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமுதாய வள மேலாண்மை ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட இளங்கலைப்பட்டம் இவற்றுடன் திட்டம் உருவாக்குதல் / செயலாக்கம், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் 2 ஆண்டுகள் அனுபவம், சமூகநலன் / பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.மேலும் கணினி அறிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும். 
01.01.2025 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்

சமூகப்பணியாளர் (2 பணியிடங்கள்) (மாத தொகுப்பூதியம் ரூ.18,536)

சமூகப்பணி / சமூகவியல் / சமூக அறிவியல் / ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட B.A., இளங்கலைப்பட்டம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும். 01.01.2025 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 27.01.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
கொக்கிரக்குளம், திருநெல்வேலி 9 தொலைபேசி எண் 0462 – 2901953 .  என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory