» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ரூ.50ஆயிரம் சம்பளத்தில் பணி : விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 20, ஜனவரி 2025 5:09:56 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்கத்தில் இளம் வல்லுநர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மாவட்ட கண்காணிப்பு அலகின் மூலம் ஒவ்வொரு மாதமும் துறை வாரியான தரவுகள் சேகரித்து அரசு திட்டங்களின் பகுப்பாய்வு அறிக்கையினை தலைமையிடத்திற்கு சமர்ப்பிக்கப்படும். இவ்வலகில் வெளிசேவை முறையில் (Outsourcing) இளம் வல்லுநர் (Young Professional) தற்காலிக பணியிடம் ஒன்று மட்டும் ஒரு வருட காலத்திற்கு மாதம் ரூ.50,000 தொகுப்பூதியம் (Consolidated Pay) அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணிக்கு கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளர் பட்டப்படிப்பு, தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (4 ஆண்டுகள் பட்டப்படிப்பு மட்டுமே) அல்லது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப அறிவியல், தரவு அறிவியல், புள்ளியல் மற்றும் தொடர்புடைய முதுநிலை பட்டப்படிப்புகள் படித்த தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும், இப்பணிக்கான கல்வித் தகுதி, அனுபவம், நிபந்தனைகளை அறியவும், இணையவழியில் விண்ணப்பிக்கவும் https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தினை பார்வையிடுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பாவம்Jan 20, 2025 - 09:03:33 PM | Posted IP 162.1*****