» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

துப்பாக்கி முனையில் வங்கியில் பணம், நகை கொள்ளை: அம்பை நீதிமன்றத்தில் 2பேர் ஆஜர்!!

செவ்வாய் 21, ஜனவரி 2025 8:26:44 PM (IST)



மங்களூரில் துப்பாக்கி முனையில் வங்கியில் பணம் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் நெல்லையை சேர்ந்த இருவரை மங்களூர் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் இருவரும் இன்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

கர்நாடக மாநிலம் தட்சிண கனடா மாவட்டம் மங்களூர் அருகே உல்லால் பகுதியில் கோட்டேகார் கூட்டுறவு சங்க வங்கி செயல்படுகிறது இந்த வங்கியில் கடந்த 17ஆம் தேதி முகமூடி அணிந்த ஐந்து மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் ரொக்க பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது கொள்ளையர்கள் கேரளா வழியாக போலியான காரின் பதிவு எண் கொண்டு இரண்டு கார்களில் தப்பிச் சென்றது தெரியவந்தது. 

ஒரு கார் மங்களூர் வழியாகவும் மற்றொரு கார் கேரளா நோக்கி சென்றதாகவும் தகவல் கிடைத்தது வங்கியில் இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது வெளியே இருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கரப்பு நிற பியட் காரில் கொள்ளையர்கள் தப்பி செல்லும் காட்சி பதிவாகியிருந்த்து அதனடிப்படையில் மங்களூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து சுங்கச்சாவடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருய்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் பெயரில் கொள்ளையர்களின் காரின் நம்பரை வைத்து விசாரித்தபோது, கொள்ளையர்கள் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. எனவே மங்களூர் தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்றனர். அங்கு மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரித்தபோது தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உள்பட 3 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையது தெரியவந்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பத்மநேரி பகுதியை சேர்ந்த முருகாண்டி மற்றும் கல்லிடைக்குறிச்சியக சேர்ந்த யோசுவா இருவரையும் மங்களூர் தனிப்படை போலீசார் கையும் களவுமாக நெல்லையில் வைத்து பிடித்து கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து சுமார் ரூ.2 லட்சம் பணம் மற்றும் நகைகள் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று மாலை 2 பேரையும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நீதிபதி அர்ஜூந்தன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் பின்னர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர் குறிப்பாக வட மாநிலச் சேர்ந்த மேலும் சிலருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய பரபரப்பு ஏற்படுத்திய மங்களூர் வங்கி கொள்ளை வழக்கில் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory