» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளை.யில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
திங்கள் 27, ஜனவரி 2025 5:16:51 PM (IST)

பாளையங்கோட்டையில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு, பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று (27.01.2025) நடைபெற்ற சாலை பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், கொடியசைத்து துவக்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா (01.01.2025 முதல் 31.01.2025 வரை) முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்றையதினம் காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் பொதுமக்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டமாட்டேன், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டமாட்டேன், குடி போதையில் வாகனம் ஓட்டமாட்டேன், சீட்பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டமாட்டேன், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி கொடுப்பேன், மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்பமாட்டேன், நான் சாலை விபத்திற்கு காரணமாக இருக்கமட்டேன் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பேரணி வ.உ.சி மைதானத்திலிருந்து, வண்ணாரப்பேட்டை வரை சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், இப்பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பேரணியில், மாநகர காவல் உதவி ஆணையாளர் (கிழக்கு) வினோத் சாந்தா ராம், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ)மோகன பிரியா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபாகரன், பெருமாள், ராஜசேகர், போக்குவரத்துறை, காவல்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)

கடந்த 3 மாதங்களில் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ள தென் மாவட்டங்கள்!
திங்கள் 24, மார்ச் 2025 8:32:18 PM (IST)
